தராசு
மதக் கொள்கைகள் ஐரோப்பாவிலே கொஞ்சம் பரவலாம்.”
ஆங்கிலேயர்;— “இவ்வளவுதானா?“
தராசு:— “இவ்வளவுதான் இப்போது நிச்சயமாகச் சொல்லமுடியும்.“
ஆங்கிலேயர்:— “தேச விரோதங்கள் தீர்ந்து போய்விடமாட்டாதா?“
தராசு;— “நிச்சயமில்லை. ஒரு வேளை சிறிது குறையலாம். அதிகப்பட்டாலும் படக்கூடும்.“
ஆங்கிலேயர்:— “‘ஸர்வ-தேச-விதிக்கு’ வலிமை அதிகமாய், ‘இனிமேல் இரண்டு தேசத்தாருக்குள் மனஸ்தாபங்கள் உண்டானால் அவற்றைப் பொது மத்தியஸ்தர் வைத்துத் தீர்த்துக் கொள்வதேயன்றி, யுத்தங்கள் செய்வதில்லை’ என்ற கொள்கை ஊர்ஜிதப்படாதோ?“
தராசு:— “நிச்சயமில்லை. அந்தக் கொள்கையைத் தழுவி ஆரம்பத்திலே சில நியதிகள் செய்யக்கூடும். பிறகு அவற்றை மீறி நடக்கவுங்கூடும்.“
ஆங்கிலேயர்:— “இரண்டு தேசத்தார் எப்போதும் நட்புடன் இருக்கும்படி செய்வதற்கு வழியென்ன?
தராசு:— “ஒருவரையொருவர் நன்கு மதித்தல், ஸமத்வ தர்மம், ஹிந்து வேதப் பழக்கம்.“
45