இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தராசு
ஆங்கிலேயர் “ஸாயங்கால வந்தனம்” என்று சொல்வதற்கு “ஸாங்கால் வண்டனம்” என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டு எழுந்து போய்விட்டார்.
பிறகு ஐயங்கார் (தமிழில்):— “நானும் போய் வருகிறேன். இந்த ஆங்கிலேயர் கேட்ட கேள்விகளைத் தான் நானும் கேட்க நினைத்தேன். அவருக்குச் சொல்லிய மறுமொழி எனக்கும் போதும். நான் போய் வருகிறேன், நமஸ்காரம்“ என்றார்.
தராசு:— “போய் வாரும், உமக்கு லக்ஷ்மி கடாக்ஷமும், தமிழிலே சிறிது பாண்டித்தியமும் உண்டாகுக“ என்று ஆசீர்வாதம் பண்ணிற்று. ஐயங்கார் சிரித்துக் கொண்டே போனார்.
40