பக்கம்:தராசு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

ஆரம்பம். அது அத்தனை ரஸமில்லை” என்று சொல்லிக் கவிராயர் விழித்தார்.

“மாதிரி சொல்லும்“ என்றது தராசு.

புலவர் பாடத் தொடங்கினார். தொண்டை நல்ல தொண்டை.

“களை யொருவன் கவிச்சுவையைக் — கரை
காண நினைத்த முழு நினைப்பில் — அம்மை
தோளசைத் தங்கு நடம்புரிவாள் — இவன்
தொல்லறி வாளர் திறம்பெறுவான்.

ஆ! எங்கெங்கு காணிலும் சக்தியடா! — தம்பி
ஏழு கடலவன் மேனியடா!
தங்கும் வெளியினிற் கோடியண்டம் — எங்கள்
தாயின்கைப் பந்தென வோடுமடா!
கங்குலில் ஏழு முகிலினமும் — வந்து
கர்ச்சனை செய்தது கேட்டதுண்டோ?
மங்கை நகைத்த ஒலியதுவாம் — அவள்
வாயிற் குறுநகை மின்னலடா!“

தராசு கேட்டது:— “புலவரே, தமிழ் யாரிடம் படித்தீர்?“

கவிராயர்:— “இன்னும் படிக்கவில்லை; இப்போதுதான் ஆரம்பம் செய்கிறேன்.“

தராசு:— “சரிதான், ஆரம்பம் குற்ற மில்லை. விடாமுயற்சியும் தெய்வபக்தியும் அறிவிலே விடுதலையும் ஏறினால், கவிதையிலே வலிமையேறும்.“


48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/49&oldid=1770899" இலிருந்து மீள்விக்கப்பட்டது