பக்கம்:தராசு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

இங்ஙனம் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில் சீட்டிக் கடை ஸேட் வந்தார்.

“சாமியாரே, தீபாவளி சமீபத்திலிருக்கிறது. ஏதேனும் சீட்டித் துணி செலவுண்டா?” என்று ஸேட் கேட்டார்.

“இல்லை” என்று சொன்னேன்.

அப்போது ஸேட் சொல்லுகிறார்;— “நான் அதற்கு மாத்திரம் வரவில்லை. வேறு ஸங்கதி கேட்கவும் வந்தேன். தராசு நடக்கப் போவதை அறிந்து சொல்லுமோ?”

“சொல்லாது” என்று தராசே சொல்லிற்று.

“சொல்ல சம்மதமிருந்தால் சொல்லும். இல்லாவிட்டால் சொல்லாது. எதற்கும், நீர் கேட்க வந்த விஷயமென்ன? அதை வெளியிடும்” என்று நான் சொல்லப் போனேன்.

தராசு என்னிடம், “காளிதாஸா, அ—” என்றது. இந்த “அ” காரத்துக்கு “அடக்கு” என்றர்த்தம். அதாவது “என்னுடைய கருத்துக்கு விரோதமாக வார்த்தை சொல்லாதே” என்றர்த்தம்.

தராசு “அ—” என்றவுடனே நான் வருத்தத்துடனே தலை குனிந்து கொண்டேன்.

ஸேட்:— “தீபாவளி ஸமயத்தில் எங்கள் கடைக்குப் பத்து நூறாகவும், நூறு ஆயிரமாகவும், லாபம் வரும்படி தராசு தன் வாயினால் வாழ்த்த வேண்டும். அப்படி வாழ்த்துவதற்கு ஏதேனும் கூலி வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன்” என்றார்.

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/50&oldid=1770946" இலிருந்து மீள்விக்கப்பட்டது