பக்கம்:தராசு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

பாட்டி சொல்லுகிறாள்:— “ருக்மணி கர்ப்பமாயிருக்கிறாள்.”

“ருக்மணி யார்!” என்று தராசு கேட்டது.

“என்னுடைய இரண்டாவது பேத்தி” என்று பாட்டி சொன்னாள். “அவளுக்கு ஏழெட்டு மாஸமாய்விட்டது. மூத்தவளுக்கு நாலைந்து மாஸம் இரண்டு பேருக்கும் புருஷக் குழந்தை பிறக்கவேணும். மூத்தவள் புருஷனுக்கு ஸர்க்காரில் 150 ரூபாய் கொடுக்கிறார்கள். செலவுக்குத் தட்டத்தான் செய்கிறது. அவன் சம்பளம் உயரவேணும். வீட்டிலே காளிபடம் வைத்துப் பூஜை பண்ணுகிறான். அந்தப் படம் வீட்டிலிருந்தால் நல்லதில்லை என்று சொல்லுகிறார்கள். அவனிடம் சொல்லிப் பார்த்தேன்; கேட்கவில்லை. இந்தக் குழந்தைக்கு அடிக்கடி மாந்தம் வருகிறது. பேய் பிசாசுகளின் சேஷ்டை ஏதேனும் இருக்கலாமோ என்னவோ தெரியவில்லை. மாரியம்மனுக்குப் பூஜை செய்விக்க வேண்டுமென்று பூஜாரி சொல்லுகிறான். எனக்கு அந்த எலிக்கடி விஷம் இன்னும் உடம்பை விட்டுப் போகவில்லை. அடிக்கடி ஜ்வரம் வந்து கொண்டிருக்கிறது. எல்லா தோஷங்களும் நீங்குவதற்கு ஏதேனும் பரிஹாரம் செய்யவேண்டும். தராசைக் கேட்டால் எல்லா சங்கடங்களுக்கும் தீர்ப்புச் சொல்லுமென்று காலேஜ் வாத்தியார் கண்ணாடி நாராயணசாமி ஐயர் சொன்னார். ஏதேனும் ஒரு பரிகாரம் சொல்ல வேண்டும்” என்று பாட்டி ப்ரஸங்கத்தை முடிவு செய்தாள்.

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/54&oldid=1771012" இலிருந்து மீள்விக்கப்பட்டது