பக்கம்:தராசு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

நம்மாலே சில ஜீவன்களுக்கு வயிற்றுப் பசி தீர்ந்து சந்தோஷம் சிறிது நேரமுண்டாகும். எல்லாம் ஒன்றுதான். விதியே துணை. ஹிந்துஸ்தானத்தின் மேலே படையெடுப்போம்’ என்றான். ஆள் பலமில்லை; பணமில்லை. ராஜபுத்ர ஸ்தானத்து க்ஷத்திரியர்களை வெல்லுவதென்றால் ஸாதாரணமான காரியமன்று; ஒவ்வொரு ராஜபுத்ரனும் ஒவ்வொரு மஹா சூரன். எப்படியோ! பாபர்ஷா வென்று விட்டான், விதியை நம்பி, விதி வெற்றிக்குத் துணையாகும். விதியை நம்பி விதை போடமலிருந்தால், பயிர் விளையாது. விதியை நம்பி “உழைத்தால்அநேகமாக விளையும்” என்று தராசு சொல்லிற்று.

என் கையிலிருந்த ஒரு தர்ம நிதிப்பணம். அதில் ஒன்பது ரூபாய் எடுத்து அந்தப் பையனிடம் கொடுத்தேன். “விதி உண்மைதான்” என்று சொல்லி லக்ஷ்மீவராஹன் ஒப்புக் கொண்டு போனான்.

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/57&oldid=1771015" இலிருந்து மீள்விக்கப்பட்டது