பக்கம்:தராசு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

யங்களையும் தீரத் தெரிந்து கொண்டு முடிவு சொல்லுதல் கஷ்டம். நமது தேகாபிமானிகளுள் ஒருவரை என் நண்பன், “ஏனைய்யா, நான் இந்த ஸ்வராஜ்ய சங்கத்திலே (அதாவது, மிஸஸ் அனிபெஸன்ட் ஏற்பாடு செய்யும் “ஹோம்-ரூல்” சங்கத்திலே) சேரலாமா?” என்று கேட்டால், அவர் சொல்லும் மறுமொழியிலிருந்து எந்த விஷயத்திலும் முடிவான தீர்மானஞ் செய்தல் எவ்வளவு கஷ்டமென்பது தெரியும்.

இன்று காலை தராசுக் கடைக்கு இரண்டு பிள்ளைகள் வந்தார்கள். ஒருவனுக்கு வயது பதினெட்டிருக்கும்ந மற்றவனுக்கு இருபது வயதிருக்கலாம்.

“நீங்கள் யார்?” என்று கேட்டேன்.

மூத்தவன் சொல்லுகிறான்:— “நாங்கள் இருவரும் புதுச்சேரிக் கலாசாலையில் வாசிக்கிறோம். தராசுக் கடையின் விஷயங்களைக் கேள்விப்பட்டு, இங்கே சில ஆராய்ச்சிகள் செய்துவிட்டுப் போகலாமென்று வந்தோம்.”

தராசினிடம் விஷயத்தைத் தெரிவித்தேன். தராசு சொல்லிற்று:— “மத விஷயமான கேள்விகள் கேட்பதானால் சுருக்கமாகக் கேட்க வேண்டும்.”

இதைக் கேட்டவுடன் இரண்டு பிள்ளைகளும் திகைத்து விட்டார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு மூத்தவன் ஒருவாறு மனதைத் திடஞ் செய்து கொண்டு சொல்லுகிறான்:—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/62&oldid=1771259" இலிருந்து மீள்விக்கப்பட்டது