பக்கம்:தராசு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

“நான் சில தினங்களாக ராமாயணம் வாசித்துக் கொண்டு வருகிறேன். அதிலே, விசுவாமித்திரர் என்ற ரிஷி ஆயிர வருஷம் தவம்செய்ததாகவும், அந்த தவத்தில் ஏதோ குற்றம் நேர்ந்துவிட்டபடியால் மறுபடி ஆயிர வருஷம் தவம் புரிந்ததாகவும் எழுதப்படருக்கிறது. இக்காலத்தில் மஹா யோகிகளென்றும் ஞானிகளென்றும் சிலரை நமது ஜனங்கள் வழிபடுகிறார்கள். இவர்களெல்லாம் மற்ற ஸாமான்ய ஜனங்களைப் போலவே நூறு நூற்றிருபது வருஷங்களுக்குள் மடிந்து போகிறார்கள். விசுவாமித்திரர் கதையை நான் ஒரு திருஷ்டாந்தமாகக் காட்டினேன். ‘பழைய புராணங்களிலும், இதிஹாஸங்களிலும் பொய்க் கதைகள் மலிந்து கிடக்கின்றன’ என்பது என்னுடைய கருத்து. அப்படி யிருக்க, ‘நம்மவர் அவற்றைப் பக்தி சிரத்தையுடன் போற்றத் தகுந்த உண்மை நூல்க என்பது ளென்று பாராட்டுதல் பொருந்துமா?’ என்னுடைய கேள்வி.”

தராசு சொல்லுகிறது:— "புராணங்கள் முழுதும் சரித்திரமல்ல; ஞான நூல்கள்; யோக சாஸ்தி ரத்தின் தத்துவங்களைக் கவிதை வழியிலே கற்பனைத் திருஷ்டாந்தங்களுடன் எடுத்துக் கூறுவன. இவை யன்றி நீதி சாஸ்திரத்தை விளக்கும்படியான கதை களும் அந்நூல்களில் மிகுதியாகச் சேர்ந்திருக்கின் றன. சரித்திரப் பகுதிகளும் பல உண்டு. இவ்வாறு பல அமிசங்கள் சேர்ந்து ஆத்ம ஞானத்துக்கு வழி காட்டி, தர்ம நீதிகளை மிகவும் நன்றாகத் தெரிவிப்ப-

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/63&oldid=1771260" இலிருந்து மீள்விக்கப்பட்டது