தராசு
தால் அந்த நூல்களை நாம் மதிப்புடன் போற்றி வருதல் தகும்.”
பிறகு இளைய பிள்ளை கேட்டான்:— “உடையை என்பது நம்முடைய ஜன்மாந்திரத்தில் செய்த பாவ புண்ணியத்தின் பயனல்லவா?”
தராசு சொல்லுகிறது:— “இல்லை. ஒருவன் தன் காலத்திலே செய்யும் செய்கைகளும் அவன் முன்னோர் செய்துவிட்டுப் போன செய்கைகளுமே உடைமைக்குக் காரணமாகும். ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் காரணம் தெரிய வேண்டுமானால் அர்த்த சாஸ்திரம் (பொருள் நூல்) பார்க்க வேண்டும். ஜன்மாந்தர விஷயங்களைக் கொண்டு வருதல் வீண் பேச்சு. அதிலே பயனில்லை.”
இளையவன் கேட்கிறான்:— “முன் பிறப்பும் வருபிறப்பும் மனிதனுக்குண்டென்பது மெய்தானா?”
தராசு சொல்லுகிறது:— “அந்த விஷயம் எனக்குத் தெரியாது.”
இளையவன்:— “ஆத்மா உண்டா; இல்லையா?"
தராசு:— “உண்டு.”
இளையவன்:— “அதற்குப் பல ஜன்மங்கள் உண்டா, இல்லையா?”
தராசு:— “உலகத்தினுடைய ஆத்மாதான் உனக்கும் ஆத்மா. உனக்கென்று தனியாத்மா இல்லை. எல்லாப் பொருள்களும் அதனுடைய வடிவங்-
63