இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தராசு
கள். எல்லாச் செய்கைகளும் அதனுடைய செய்கைகள். அவனன்றி ஓரணுவும் அசையாது.”
இளைய பிள்ளை:— “சரி, அது போகட்டும். இப்போது ஒருவன் செல்வம் சேர்க்க விரும்பினால் முடியுமா?”
தராசு:— “முடியும். இஹலோக சாஸ்திரங்களைக் கற்று, வியாபார விதிகளைத் தெரிந்துகொண்டு, தெளிவுடனும், விடாமுயற்சியுடனும் பாடுபட்டால் முடியும். ‘முயற்சி திருவினை ஆக்கும்.’”
பிள்ளைகள் “இன்னும் பல விஷயங்கள் கேட்க வேண்டும். மற்றொரு முறை வருகிறோம்” என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
64