பக்கம்:தராசு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

கொள்ள வேண்டுகிறார்” என்று தராசை நோக்கிச் சொன்னேன்.

“அபிப்பிராயமென்ன?” என்று கேட்டது தராசு.

“ராஜீய விஷயத்தைக் கலக்காமல் பேசும்” என்று நான் விண்ணப்பம் செய்து கொண்டேன்.

காலேஜ் மாணாக்கர் சொல்லுவதானார்:—

ஸ்ரீமான் காந்தி வாசம் செய்யும் ஆமதாபாதில் ஸத்யாக்கிஹ ஆசிரமம் ஏற்படுத்தியிருக்கிறார். அந்த ஆசிரமத்தில் யௌவனப் பிள்ளைகள் பலரை வைத்துக் கொண்டு அவர்களை தேச ஸேவைக்குத் தாயர்படுத்துகிறார். அவருடைய ஆசிரமத்திலே பயிற்சி பெறுவோருக்குச் சில விரதங்கள் அவசியமென்று ஏற்படுத்தியிருக்கிறார். உண்மையிலே லோகோபகாரம் செய்ய விரும்புவோர் எல்லோருமே மேற்படி விரதங்களை அனுஷ்டிக்க வேண்டுமென்பது அவருடைய கொள்கை. கிறிஸ்தவ சங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் அந்த விரதங்களைக் குறித்துத் தான் பேசினார். விசேஷமாக அவர் வற்புறுத்திச் சொல்லிய விஷயங்கள் பதினொன்று. அவை பின்வருமா:—

1. சத்ய விரதம்ன— எப்போதும், யாரிடத்திலும், என்ன துன்பம் நேரிட்டாலும், பிரஹ்லாதனைப் போல ஒருவன் உண்மையே பேசவேண்டும்.

2. அஹிம்ஸா விரதம்:— எவ்வுயிருக்கும் துன்பஞ் செய்யலாகாது; யாரையும் பகைவராக நினைக்க-

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/67&oldid=1771547" இலிருந்து மீள்விக்கப்பட்டது