தராசு
லாகாது; ஒருவன் உன்னை அடித்தால் நீ திரும்பி அடிக்கடக்கூடாது.
3. பிரமசரியம்:— விவாகம் பண்ணிக் கொள்ளக் கூடாது; ஏற்கெனவே மனைவி யிருந்தால் அவளை ஸஹோதரம் போல நடத்த வேண்டும்.
4. நாக்கைக் கட்டுதல்:— உணவிலே மஸாலா சேரக்கூடாது; ருசியை விரும்பி உண்பது பிழை; அதனால் உஷ்ணம் அதிகரித்து, போக இச்சையுண்டாகிறது.
5. உடைமை மறுத்தல்:— ஒருவன் ஒரு பொருளையும் தனது சொத்தாகக் கொள்ளலாகாது.
6. சுதேசியம்:— நமது தேசம், நமது ஜில்லா, நமது கிராமத் தொழிலை முதலாவது ஆதரிக்க வேண்டும்; நமது தேசம், நமது ஜில்லா, நமது கிராமத்து அம்பட்டன் நேரே க்ஷவரம் செய்யாமல் போனாலும், அவனுக்குப் பயிற்சி உண்டாகும்படி செய்து நாம் அவனிடமே க்ஷவரம் செய்து கொள்ள வேண்டும். வெளியூர் அம்பட்டனை விரும்பக்கூடாது.
7. பயமின்மை:— எதற்கும் நடுங்காத நெஞ்சம் வேண்டும். அஃதுடையவனே பிராமணன்.
8. தீண்டல்:— தீண்டாத ஜாதி என்று ஒருவரையொருவர் அமுக்கி வைப்பது பாவம். அது பெருங்கேடு. எந்த ஜாதியையுந் தீண்டலாம்.
67