பக்கம்:தராசு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

9. தேச பாஷை:— தேச பாஷையிலேயே கல்வி பயில வேண்டும்.

10. தொழிற் பெருமை:— எல்லாத் தொழில்களுக்கும் ஸமமான மதிப்புண்டு. ஒரு தொழில் இழிவாகவும் மற்றொரு தொழில் உயர்வாகவும் கருதலாகாது.

11. தெய்வ பக்தி:— பொதுக் காரியங்களிலும் ராஜீய விஷயங்களிலும் பாடுபடுவோருக்கு தெய்வ பக்தி வேண்டும்.

இதுதான் ஸ்ரீ காந்தி செய்த பிரசங்கத்தின் ஸாராம்சம்.

தராசு சொல்லலாயிற்று:—

“ஸ்ரீமான் காந்தி நல்ல மனுஷர்.

“அவர் செல்லுகிற ஸத்ய விரதம், அஹிம்ஸை. உடைமை மறுத்தல். பயமின்மை—இந்த நான்கும் உத்தம தர்மங்கள்—இவற்றை எல்லோரும் இயன்றவரை பழகவேண்டும். ஆனால் ஒருவன் என்னை அடிக்கும்போது நான் அவனைத் திரும்பி அடிக்கக்கூடாதென்று சொல்லுதல் பிழை.

“சுதேசியம், ஜாதி ஸமத்வம், தேசபாஷைப் பயிற்சி, தெய்வ பக்தி இந்த நான்கையும் இன்றைக்கே பழகி சாதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நமது தேசம் அழிந்துபோய்விடும்.


68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/69&oldid=1771557" இலிருந்து மீள்விக்கப்பட்டது