பக்கம்:தராசு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

“நாக்கைக் கட்டுதல், பிரமசரியம், இவை யிரண்டையும் செல்வர்கள், இடையிடையே அனுஷ்டித்தால் அவர்களுக்கு நன்மை யுண்டாகும். ஏழைகளுக்கு இந்த உபதேசம் அவசியமில்லை. அவர்களுக்கு நாக்கை ஏற்கனவே கட்டித்தான் வைத்திருக்கிறது. பிரமசரயத்தை ஜாதி முழுமைக்கும் ஸ்ரீ காந்தி தர்மமென்று உபதேசம் செய்யவில்லை. அந்த வேலை செய்தால் தேசத்தில் சீக்கிரம் மனிதரில்லாமல் போய்விடும்.

“காந்தி பதினோரு விரதம் சொன்னார். நான் பன்னிரண்டாவது விரதமொன்று சொல்லுகிறேன். அது யாதெனில்:— ‘எப்பாடுபட்டும் பொருள் தேடு; இவ்வுலகத்திலே உயர்ந்த நிலைபெறு.’ இப்பன்னிரண்டாவது விரதத்தை தேசமுழுதும் அனுஷ்டிக்கவேண்டும்.”

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/70&oldid=1771560" இலிருந்து மீள்விக்கப்பட்டது