பக்கம்:தராசு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

பாரம் அருமையானது. இதிலே ஜயம்பெறவேண்டுமானால் ஸாமான்ய உபாயமெதுவும் போதாது. செய்கைக்குத் தகுந்தபடி உபாயம்; இதை மறந்து விடலாகாது. உனக்கு வேண்டியதெல்லாம் இரண்டே நெறி. தெய்வ பக்தி, பொறுமை. குறுங்குறு மஹா ரிஷி வாக்யத்தைத் தவற விடாதே. லௌகிகச் செய்கை நேரும்போது அதை முழுத் திறமையுடன் செய். மற்ற நேரங்களில் பராசக்தியை தியானம் செய்து கொண்டிரு. நமது வியாபரம் மேலான நிலைமைக்கு வரும்.”

காளிதாசன்:— “எப்போது?”

தராசு:— “பொறு. விரைவிலே நன்மை காண்பாய்.”

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/76&oldid=1771633" இலிருந்து மீள்விக்கப்பட்டது