14
தராசுக்கடையை நெடுநாளாக மூடி வைத்துவிட்டேன். விஷயம் பிறருக்கு ஞாபகத்தி லிருக்குமோ, மறந்து போயிருக்குமோ என்ற ஸந்தேஹத்தால் எழுத முடியவில்லை. தராசுக்கடை என்பதென்ன? பத்திரிகை படிப்போர் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். ஞாபகம் இல்லாவிட்டாலும் பெரிதில்லை. அந்தக் கடையை மாற்றிவிட்டேன்; தராசு என்ற மகுடமிட்டு இனிமேல் எழுதப்படும் வினாவிடைகளில் கதைக்கட்டு சுருங்கும்; சொல் நேர்மைப்படும்.
தராசு என்பது தர்க்க சித்தாந்தம். ஒரு கக்ஷி சொல்லி அதற்கு ப்ரதி கக்ஷி சொல்லி அங்கு தீர்ப்புக் காணுவதே தராசின் நோக்கம்.
என்னுடைய ஸ்நேஹிதர் வேணு முதலியார் என்றொருவர் உண்டு. அவர் வைஷ்ணவர். அவர் வாயினால் பேசுவதே கிடையாது. ஆஹார வ்யவஹாரங்கள் எல்லாம் குறிகளால் நடத்திவருகிறார். அவர் தமிழில் ஒரு வ்யாஸம் “ஊமைப் பேச்சு” என்ற மகுடத்துடன் எழுதி வெளியிட்டிருக்கிறார். ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு அந்த நூல் அச்சிடப்பட்டது. ஸமீபத்தில் நான் அவரிடம் விசாரணைசெய்த போது ஒரு பிரதிகூட மிச்சம் இல்லை என்று சொன்னார்.
76