தராசு
கருத்தை அவன் எப்படியேனும் பிறருக்குத் தெரியும்படி செய்துவிடுகிறான்.”
இங்ஙனம் பலவித நியாயங்கள் காட்டி வேணு முதலியார் தமது நூலில் மனிதனுக்கு பாஷையே மிகை என்று ஸ்தாபனம் செய்திருக்கிறார். ஆனால் மேற்படி விதியை அவர் தமது நடையில் பழக இல்லை. அவர் எப்போதும் சளசள என்று வாயினால் பேசாவிட்டாலும் எழுதிக் குவிக்கிறார். “எழுத்து பாஷையின் குறிதானே, வேணு முதலியாரே? நீர் பாஷையே மிகை என்று சொல்லிவிட்டு ஓயாமல் எழுதி எழுதிக் கொட்டுகிறீரே?” என்று அவரிடத்தில் கேட்டால், அவர் “பேச்சே துன்பம்; எழுத்து சுகம்” என்று எழுதிக் காட்டுகிறார். இன்னும் ஒரு வேடிக்கை; ‘வாயினால் பேசக்கூடாது’ என்று விரதம் வைத்துக் கொண்டு வேணு முதலியார் பாட்டுப் பாடுவதில் சலிப்பது கிடையாது. இவரும் நமது வேதாந்த சிரோமணி ராமராயர் என்ற மித்திரரும் சிலதினங்களின் முன்பு (சந்திர கிரஹணம் பிடித்த தினத்தின் மாலையில்) என்னைக் கடற்கரையில் பார்த்தார்கள்.
“தராசுக்கடை கட்டியாய்விட்டதுபோல் இருக்கிறதே?” என்று ராமராயர் சொன்னார். “இங்கே செய்வீர். இன்னே செய்வீர்” என்று வேணு முதலியார் காம்போதி ராகத்தில் பாடினார். “‘தராசுக் கடையை இங்கே இப்போது திறக்க வேண்டும்’ என்ற கருத்துடன் வேணு முதலி பாடுகிறார்” என்று ராமராயர் வ்யாக்யானம் பண்ணினார்.
78