இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தராசு
“திறந்தோம்” என்றேன்.
ராமராயர் சொல்லுகிறார்:— “நான் ஒரு கக்ஷி சொல்லுவேன். எதிர்க்கக்ஷியை வேணு முதலியார் பாட்டிலே பாடிக் காட்ட வேண்டும். காளிதாஸர் தீர்ப்புச் சொல்ல வேண்டும். இதுதான் தராசுக்கடை” என்றார்.
“ஸம்மதம்” என்றேன். வேணு முதலியாரும் தலையை அசைத்தார்.
ராமராயர் சொல்லுகிறார்:— “அனிபெஸன்ட் அம்மை ‘தியாஸபி’ நடத்தினதெல்லாம் ஸ்வராஜ்ய வேலைக்கு அடிப்படையென்று நம்புகிறேன்.”
வேணு முதலியார் பாடுகிறார்:—
“நந்தவனத்திலோ ராண்டி; அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தானொரு தோண்டி; அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.”
ராமராயர்:— “அன்ய ஜாதியிலே பிறந்த போதிலும் நான் அனிபெஸன்டை ஹிந்துவாகவே பாவிக்கிறேன்.”
தன்னைத்தான் ஆளவேண்டும்
தன்னைத்தான் அறியவேண்டும்
தன்னைத்தான் காக்கவேண்டும்
தன்னைத்தான் உயர்த்த வேண்டும்.”
79