பக்கம்:தராசு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

ராமராயர்:— “ரஸ்வராஜ்யம் என்பது விபரீதம் அன்று. அதை ஆங்கிலர் கொண்டாடுவது ஆச்சர்யமில்லை. ஆங்கில ஸ்திரீகளும் புருஷர்களும் நம்மிடம் நேசம் காட்டும்போது நாம் சந்தேகப்படுவது நியாயமில்லை. ஆங்கிலேயர்களில் நல்லவர்களே இருக்கக்கூடாதா? எல்லாரும் மனித ஜாதிதானே? ஹிந்துக்களுக்கு ஸ்வராஜ்யம் உடன் பிறந்த உரிமை என்பதை ஒப்புக் கொள்ளும் பிறரை நாம் மித்திரராகவே கொள்ளவேண்டும். இங்கிலாந்திலுள்ள ராஜ வம்சத்தாருக்கு நாம் ஸ்வராஜ்யம் பெறுவதனாலே எவ்விதமான நஷ்டமும் கிடையாது. பொது ஜனங்களுக்கும் அப்படியே. பார்லிமெண்டாருக்கும் அப்படியே. நம்முடைய உபத்ரவம் இல்லாமலிருந்தால் அவர்கள் உள்நாட்டு விஷயங்களை அதிக சிரத்தையுடன்கவனிக்க இடம் உண்டாகும். சிற்சில வியாபாரிகளுக்கும் சில உத்தியோகஸ்தர்களுக்கும் நாம் ஸ்வராஜ்யம் செலுத்துவதனாலே வரும்படி குறையும். ஆதலால் இந்த வியாபாரிகளின் கூட்டத்தையும் உத்யோகக் கூட்டத்தையும் சேராத ஆங்கிலேயர்களுக்கு நம்மிடம் அபிமானம் ஏற்படுதல் அசாத்யமன்று. அது நம்பத் தக்கதாகும்” என்றார்.

வேணு முதலியார் பாடுகிறார்:—

“நல்ல விளக்கிருந்தாலும் கண் வேண்டும், பெண்ணே;
நாலு துணையிருந்தாலும் சுய புத்தி வேண்டும்;
வல்லவர்க்கு மித்திரர்கள் பலருண்டு, பெண்ணே;
வலிமையிலார் தமக்குலகில் துணேயேது, பெண்ணே?”

80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/81&oldid=1771638" இலிருந்து மீள்விக்கப்பட்டது