பக்கம்:தராசு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தராசு

ராமராயர் சொல்லுகிறார்:— “அதிகாரிகள் அனிபெஸன்ட் சொல்வதைத் தடுக்க முடியாது. லோகத்தின் அபவாதத்துக்கு பயப்படுவார்கள். அனிபெஸன்ட் சீக்கிரம் விடுதலை பெறுவாள். அவளைப் பிடித்து வைத்ததனாலே இப்போது உலகமெங்கும் இந்தியாவின் நிலைமை தெரியக் காரணம் ஏற்படும். ஆங்கில ராஜாங்கத்துக்கு விரோதமான ராஜத்துரோகம் செய்கிறாள் என்ற வார்த்தையை அனிபெஸன்ட் விஷயத்தில் எவனும் சொல்லத் துணியமாட்டான். ‘ஸ்வராஜ்யம் கேட்பது ராஜத்துரோகம் இல்லை’ என்பதை இங்கிலாந்து ஜனங்களும் ராஜாவும் தெரிந்து கொள்ளுவதற்கு அனி பெஸன்ட் செய்த காரியம் உதவியாயிற்று.”

வேணு முதலியார் பாடுகிறார்:—

“சொல்லால் முழக்கிலோ
       சுகமில்லை மவுனியாய்ச்
சும்மா இருக்க அருள்வாய்,
       சுத்த நிர்க்குணமான பர தெய்வமே
பரஞ்சோதியே சுக வாரியே.”

அப்போது ராமராயர் என்னை நோக்கி, “காளிதாஸரே, உம்முடைய தீர்ப்பென்ன? தராசின் தீர்ப்பைச் சொல்லும்” என்று கேட்டார்.

அதற்கு நான்

நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.

81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/82&oldid=1772066" இலிருந்து மீள்விக்கப்பட்டது