இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
சித்தக்கடல் ஜூலை 1. 1915. யோகம் காலை கண் விழிக்கும்பொழுதே "பணம்" என்ற ஞாபகம். எழுந்து Bourgoine வீட்டுக்குப் போதல். போகையில் மனக்கிளர்ச்சி. இடைவழியில் துருக்கன் அவனுக்கு வழிவிட்டதைப் பற்றி மன நோதல். மரண பயம். அதன் மடமை யுணர்ச்சி. கடற் கரையில் தனியே யிருத்தல். அங்கு சாரர். மன வெறுப்பு. உதாஸீனம். செ. "மாலை" என்ற வார்த்தை - ஒரு பொய். இந்த மனமாகிய கடலை வென்று விடுவேன். பலநாளாக இதை வெல்ல முயன்று வருகிறேன். இந்த மனத்தை வெல்ல நான் படும்பாடு தேவர்களுக் குத் தெரியும். இதிலே ப்ராண பயம், வியாதி பயம், தெய்வபக்திக்குறைவு, கர்வம், மமதை, சோர்வு முதலிய ஸம்ஸ்காரங்கள் மிகுதிப்பட் டிருக்கின்றன. இவற்றை ஒழித்துவிட வேண்டும். 83