________________
சித்தக் கடல் சலோ! தெய்வமுண்டு. அது அறிவுமயம், அந்த அறிவுக்கடலில் நான் என்பது ஒரு திவலை அதற்கும் எனக்கும் ஒரு குழாய் வைத்திருக்கிறது. அந்தக் குழாயை அஹங்காரம் என்ற மாசு மூடியிருக்கிறது. இந்த அஹங்காரத்தை நீக்கிவிட்டால் தெய்வ சக்தி யும் தெய்வ ஞானமும் எனக்கு உண்டாகும்.
புகையிலைச் சாற்றினால் தலை கிறுக்கிறது. 20 லக்ஷம் தரம் புகையிலையை நிறுத்தி விடுவதாக ப்ரதிக்கினை செய்திருக்கிறேன். இதுவரை கைகூட வில்லை. ஸம்ஸ்காரம் எத்தனை பெரிய விலங்கு பார்த் தாயா? மகனே, ஸம்ஸ்காரங்களை சக்தியினால் வென் று விடு. உடல் படுத்துக்கொண்டது. உடலை வைரம் போல உறுதி உடையதாகவும், பக்ஷிகளைப் போல லாகவ முடையதாகவும், சிங்கத்தைப் போல வலி யுடையதாகவும் செய்யவேணும். உடல் வசப்படா விட்டால் இந்த உலகத்தில் வாழ்க்கை பெருந் துன்பந்தான். உடம்பே, எழுந்துட்காரு. உடம்பு எழுந்து விட்டது. முதுகு கூனுகிறது. அந்த வழக் கத்தைத் தொலைத்துவிடவேண்டும்.
வயிறு வேதனை செய்கிறது, உஷ்ணமிகுதியால். நோயற்றிருப்பதற்கு சக்தியை ஓயாமல் வேண்டிக் 84