பக்கம்:தராசு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்தக் கடல் கொள். நோயில்லை யென்று மனத்தை உறுதி செய். மனம் போல உடல். மகனே, உடல் வெற்றி கொள். அது எப் பொழுதும் நீ சொன்னபடி கேட்க வேண்டும். அது சொன்னபடி நீ கேட்கலாகாது. அது மிருகம். நீ தேவன். அது யந்திரம்.நீ யந்திரி ஜூலை 2. வியாதி பயம்.சோம்பர். இன்று காலைப் பொழு தையும் இவை வந்து வீணாக்கி விட்டன. செ-வழக்கம் போல் வந்தான். பரமேஸ்வரி! மகாஸக்தீ! உன்னிடத் தில் அமரத் தன்மை கேட்கிறேன். என்னை மனக் கவலையிலிருந்து விடுவிக்க வேண்டும். உன்னை எப் போதும் சிந்தனை செய்துகொண்டும், உனது மஹா அற்புதமான உலகத்தை எப்போதும் கண்டு தீரா மகிழ்ச்சி யடைந்து கொண்டும், தர்மங்களை இடை விடாமல் நடத்திக்கொண்டும் வருந் திறமை, எனக்கு அருள் செய்ய வேண்டும். மனமாகிய குரங்கு செய்வதை யெல்லாம் எழுதிக் கொண்டு போனால் காலக் கிரமத்தில் அதை வசப் படுத்திவிடலா மென்பது என்னுடைய கருத்து. ஒன்றை அடக்கு முன்பாக அதன் இயல்புகளை யெல் லாம் நாம் அறிந்துகொள்ள வேண்டும். நம்மால் நன் றாக அறியப்படாததை நாம் வசப்படுத்த முடியாது. சித்தத்தை வசப்படுத்துமுன் சித்தத்தை அறிய வேண்டும். அதன் சலனங்களை ஓயாமல் கவனித்து 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/86&oldid=1772069" இலிருந்து மீள்விக்கப்பட்டது