________________
சித்தக் கடல் எழுதிக்கொண்டு வந்தால், அதன் தன்மை முழுதை யும் அறிய ஹேது வுண்டாகுமென்பது என்னுடைய தீர்மானம். பராசக்தீ! ஒவ்வொரு கணமும் எனது சித்தம் சலிக்கும் முறைகளை அப்போதப்போது பொய்மை யில்லாமலும், வஞ்சக மில்லாமலும் எழுதுவதற்கு எனக்கு தைரியம் கொடுக்க வேணும். நாம் எழுதுவதைப் பிறர் பார்க்க நேரிடு மன்று கருதி நமது துர்ப் பலங்களை எழுத லஜ்ஜை யுண்டா கிறது. பராசக்தீ, என் மனத்தில் அந்த லஜ்ஜையை நீக்கிவிட வேண்டும். பாரதியினுடைய மன நடைகளை நான் எழுதப் போகிறேன். நான் வேறு. அவன் வேறு. நான் தூய அறிவு. அவன் ஆணவத்திலே கட்டுண்ட சிறு ஐந்து. அவனை எனக்கு வசப்படுத்தி நேராக்கப் போகிறேன். அவனுடைய குறைகளை எழுத அவன் லஜ்ஜைப்படுகிறான். அந்த லஜ்ஜையை நான் பொருட் டாக்காதபடி அருள் செய்ய வேண்டும். எழுது. பராசக்தியின் புகழ்ச்சிகளை எழுது. அடா! பாரதீ, அதைக் காட்டிலும் உயர்ந்த தொழில் இவ்வுலகத்தில் வேறொன்றுமில்லை. பராசக்தி வாழ்க. அவள் இந்த அகில உலகத்துக்கு ஆதாரம். அகிலம் நமக்கு மூன்று வகையாகத் தெரிகிறது.- ஜடம், உயிர், அறிவு - என. இவை தம்முட் கலந்தன. அறி 86