பக்கம்:தராசு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சித்தக் கடல் வுலகத்திலே பல படிகள் இருப்பதாக யோகிகள் நிச்சயித்திருக்கிறார்கள். இவற்றுள் ஜடத்துக்கு உயிரும், உயிருக்கு அறி வும் காரணமா மென்று யோகிகள் சொல்லுகிறார்கள். இவை யனைத்திற்கும் மூலப் பொருளாய், இவை யனைத்தையும் தனது உறுப்புக்களாகக் கொண்டு, இவையனைத்தும் தானாய், இவையனைத்தின் உயிர் நிலையாக ஒரு பொருள் உண்டு. அதனை மஹாசக்தி என்கிறோம். அதை இடைவிடாமல் த்யானம் செய்வ தால் உனது குறைகளெல்லாம் நீங்கும். பெரிய பொருளை இடைவிடாது பாவனை செய்யும் அறிவு தான் பெருமை யடைகிறது. சித்தம் ஒரு கண்ணாடி. ஓயாமல் பராசக்தியை த்யானம் செய்யுமானால் அவளுடைய சாயை இதிலே படும். அதிலே சுகமுண்டு. பத்திரிகைகளுக்கு வியாஸங்கள் எழுத வேண் டும். கடிதங்கள் எழுத வேண்டும். சோம்பர் உதவாது. வெற்றிலை போடுவதைக் குறைக்க வேணும்.பணமில் லாதது பற்றிக் கவலைப்படலாமா?மூடா,மூடா,மூடா, நாம் சுத்த அறிவல்லவா? உலகவ்யவஹாரங்களை நாம் வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருக்க வேணும், ஆணவக் கட்டிலே அகப்பட்ட சித்தத்தின் விருப்பப் படி இந்த உலகில் ஏதாவது நடக்கிறதா? சாகாத 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/88&oldid=1772071" இலிருந்து மீள்விக்கப்பட்டது