பக்கம்:தராசு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

னுடைய சித்தக் கடல் ஐந்து உண்டா? எல்லா ஐந்துக்களும் ஓயாமல் உயி ரைக் காக்கின்றன. அதில் பயனுண்டா? உயிரே ஜீவ வச மில்லாதபோது வேறெதைப்பற்றிக் கவலைப்படுவதிலேயும் என்ன பயன்? பராசக்தியின் கட்டளைப்படி உலகம் நடக்கிறது. உனக்கு வேண்டிய இன்பங்களை அவளிடம் வேண்டிக்கொள். அவள் கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு சுகமாக இரு. எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே சுக மிருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப்பேய்களெல்லாம் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப்போய்விடும். "உத்யோகினம் புருஷஸிம்ஹ முபைதி லக்ஷ்மீ:" பராசக்தியை த்யானம் செய்துகொண்டே யிருந் தால் எல்லாத் துன்பங்களும் நீங்கிவிடும், உடலும் உயிரும் ஒளிபெற்று வாழும். நூறு வயதுக்குக் குறை வில்லை. இது ஸத்யம். நூறு வயது நிச்சயமாக வாழ் வாய். மனிதனுக்கு நூறாண்டு இயற்கையிலேயே ஏற் பட்டது. இயற்கை தவறாமால், மூடக் கவலைகளில்லாம் லிருந்தால் நூறு வயது அவசியம் வாழலாம். மகனே. அச்சத்தைப் போக்கு. மண்ணையும், காற்றையும், கடலையும் எத்தனை யுகங்கள் ஒரே வடிவத்தில் வைத்துக் காப்பாற்று கிறாய்? பராசக்தீ, எனது கருவி கரணங்களிலே நீ பரிபூர்ணமாக ஸந்நிதி கொண்டு என்னையும் அங்ஙனமே காக்கவேண்டும். 88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/89&oldid=1772072" இலிருந்து மீள்விக்கப்பட்டது