________________
i d காதா சித்தக் கடல் இன்ப மில்லையா? பராசக்தீ. இந்த உலகத்தின் ஆத்மாநீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட் நாள்தோறும் உன்மீது பாட்டுப்பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களை யெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா? முதலாவது, எனக்கு என்மீது வெற்றி வரவேண் டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவரு ளால் குணமாய் விட்டது. இரண்டு மாதக் காலம் இரவும் பகலுமாக நானும் செல்லம்மாளும் புழுத் துடிப்பது போலத் துடித்தோம்.ஊண் நேரே செல்ல வில்லை இருவருக்கும். உறக்கம் நேரே வரவில்லை - இருவருக்கும். எப்போதும் சஞ்சலம், பயம், பயம், பயம்! சக்தீ, உன்னை நம்பித்தானிருந்தோம். நீ கடைசி யரகக் காப்பாற்றினாய். உன்னை வாழ்த்துகிறேன். கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம்- தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்! பராசக்தீ, ஓயாமல் கவிதை எழுதிக்கொண்டிருக் கும்படி திருவருள் செய்ய மாட்டாயா? கடன்களெல் லாம் தீர்ந்து, தொல்லை யில்லாதபடி என் குடும்பத் தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் எப்போதும் உன் புகழை ஆயிரவிதமான புதிய புதிய பாட்டுக்களில் அமைக்க விரும்புகிறேன். உலகத்தில் 89