________________
சித்தக் கடல் மஹா சக்தி - என்னுள்ளத்தில் எப்போதும் வற் றாத கவிதை யூற்று ஏற்படுத்திக்கொடு. ஓயாமல் வியாதி பயம் கொண்டு உளைகின்ற நெஞ்சமே! தூ! தூ! தூ! கோழை! புகையிலை வழக்கம் தொலைந்து விட்டது. பரா சக்தியின் அருளால். இனிக் 'கஸரத்' வழக்கம் ஏற் படவேணும், பராசக்தியின் அருளால்.தோள் விம்மி வயிரம் போலாக வேணும். நெஞ்சு விரிந்து, திரண்டு, வலிமையுடைய தாகவேணும். இரத்தம் மாசு தீர்ந்து, நோயின்றி, நன்றாக ஓடி, உடலை நன்கு காத்துக் கொண்டிருக்கவேணும்-- பராசக்தியின் அருளால். செட்டி பணத்துக்கு எத்தனை நாள் பொய் சொல்லுகிறது? பொய் வாயிதா,பொய் வாயிதா பொய் வாயிதா - தினம் இந்தக் கொடுமைதானா? சீச்சீ! பராசக்தி- உன்னை நான் நம்புவதை முற்றிலும் விட்டு நிச்சயமாக நாஸ்திகனாய் விடுவேன், நீ என்னை அற்பத் தொல்லைகளுக்கு உட்படுத்திக்கொண்டே யிருந்தால். மஹாசக்தி - நீ யிருப்பதை எவன் கண்டான்? உனக்கு அறிவுண்டென்பதை எவன் கண்டான்? இந்த உலகம் - சரி, சரி, இப்போது உன்னை வைய மாட்டேன். என்னைக் காப்பாற்று.உன்னைப் போற்று கிறேன். 91