இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
சித்தக் கடல் பிறருக்கு நான் தீங்கு நினையாதபடி நீ அருள் புரிந்தால் நல்லது. துஷ்டர்களைக்கூட நீ தண்டனை செய்துகொள். எனக்கு அதிலே ஸந்தோஷமில்லை. எனக்குப் பிறர் செய்யும் தீங்குகளைநீ தவிர்க்க வேண் டும். நான் உன்னையே சரணடைந்திருக்கிறேன். சொல்லு! மனமே, சொல்லு, பராசக்தி வெல்க! பராசக்தி வெல்க. 92