இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
STRAY THOUGHTS The wise play for victory, but feel no pain a defeat. "L'art pour l'art"- A play for its own sake. சில சங்கற்பங்கள் யன்றவரை தமிழே பேசுவேன், தமிழே எழுது வேன். சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன். எப்போதும் பராசக்தி முழு உலகின் முதற் பொருள் - அதனையே தியானஞ் செய்துகொண் டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக்கொண்டிருக்க முயல்வேன். பொழுது வீணே கழிய இடங் கொடேன், லௌகிக காரியங்களை ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுட னும், அவை தோன்றும்பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன். உடலை நல்ல காற்றாலும், இயன்றவரை சலிப்ப தாலும் தூய்மையுறச் செய்வேன். மறைத்தும் தற்புகழ்ச்சி விரும்பேன். 93 பாராட்டுதல்