பக்கம்:தராசு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சில சங்கற்பங்கள் மூடரின் உள்ளத்தில் என்னைப்பற்றிய பொய் மதிப்புண்டாக இடங்கொடேன். ஸர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத் தால் என்னுள்ளே புகச்செய்து எனது தொழில்க ளெல்லாம் தேவர்களின் தொழில்போல் இயலுமாறு சூழ்வேன். பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சனை, நடிப்பு, இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன். இடையறாத தொழில் புரிந்து இவ்வுலகப் பெரு மைகள் பெற முயல்வேன்.இயலாவிடின் விதிவக் மென்று மகிழ்ச்சியோ டிருப்பேன். எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சித்தம், இவற்றோ டிருப்பேன். ஓம். ஒரு நல்ல கதை. பக் தா இதுதான் பூலோகமா? சங்கரச் செட்டியாரிடம் கேட்டவை:- எலி பழைய எலியின் பாதையிலே வந்து பொறி யில் விழும். 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தராசு.pdf/95&oldid=1772078" இலிருந்து மீள்விக்கப்பட்டது