பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினை - விதை 9) இருந்தவர்களுக்கு ஒன்று புரிந்துவிட்டது. அன்று இந்தியச் சனி, அவனுக்கோ, அமெரிக்க ஞாயிற்றுக்கிழமை. இவர்களுக்குப் பகல். அவனுக்கு இரவு. பேசுவதாக இருந்தால், இந்நேரம் பேசியிருக்கவேண்டும். இப்போது மனைவியோடு துரங்கிக் கொண்டிருப்பான். ஆனாலும் அவனிடம் பேசியாக வேண்டுமே. மங்கையர்க்கரசி, கணவர் மறுத்துவிடக்கூடாதே என்ற பயத்தோடு ஒரு யோசனை சொன்னாள். “நாமே போன்ல பேசிடுவோமே..?” "எப்படிம்மா முடியும்? நம்மக்கிட்ட எஸ்.டி.டி. கூட கிடையாதே." 'உங்களுக்கு ஞாபகம் இருக்குதா? ஜோசியம் குறித்துக்கொடுத்த கல்யாணத் தேதியை அவன்கிட்ட சொல்றதுக்காக, அடுத்த தெருவுல ஐ.எஸ்.டி. வைத்திருக்கிற சின்னத்தம்பிகிட்ட பேசி, அவன் தன்னோட டெலிபோன் மூலம் கனெக்ஷன் வாங்கி உங்களுக்குக் கொடுத்தானே.” அழகேசன் மனைவிக்குப் பதில் ஏதும் சொல்லாமல், சின்னத்தம்பிக்கு டெலிபோனை சுழற்றினார். பல கற்றுகளுக்குப் பிறகு, இறுதிச் சுற்றாக சின்னத்தம்பியின் குரல் கேட்டது. இவரின் கோரிக்கைக்கு, அவன் உடன்பட்டான். உடனே அழகேசனும், மகனிடம் எப்படிப் பேசுவது என்று மனதில் ஒத்திகை நடத்தினார். அந்தக்காலத்தில், பிள்ளைகளையும் மனைவியையும் திட்டும்போது, இப்படி ஒத்திகை பார்க்காதவர்தான். இப்போதோ எமனுக்கு அடமானம் வைக்கப்பட்டவர்போல் தவித்தார். பிள்ளைகளுக்கும் அவர்களைப் பெற்றவளுக்கும் பிச்சை கொடுப்பதுபோல் எக்காளமாய் பணம் கொடுத்தவர், இப்போது தொழிலுக்குப் பழக்கப்படாத பிச்சைக்காரன்போல் கூசினார். இதற்குள், சின்னத்தம்பியின் டெலிபோன் குரல் கண்டங்களைக் கடந்து, அமெரிக்காவில் கிடக்கும் இளங்கோவின்