பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 க. சமுத்திரம் எதிர்முனையில் உகப்பினான். எதாவது விசேஷம் உண்டாப்பா..? அழகேசன், குழந்தையாய் குழைந்தார். என்ன விசேஷம். மகனின் தயவு இல்லையென்றால், இழவு விசேஷந்தான்.எப்படியோ கேட்கப்போனார். அந்தச் சமயம் பார்த்து, ஏற்பது இகழ்ச்சி என்று, வள்ளல்களிடம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட ஒளவையின் பள்ளிக்கூட வாசகம் இப்போது மரண வாசகமாக ஒலித்தது. ஆபத்துக்கு பாவமில்லையென்று, பாவப்பட்ட மனிதராய் சொல்ல வேண்டியதை சொல்லப் போனார். அதற்குள், தோழனோடாயினும் ஏழமை பேசேல் என்று அதே ஒளவை அவரது வாயைப் பொத்துகிறாள். ஆனாலும், அவர் பேசுகிறார். எனக்கு என்கிற வார்த்தை'உனக்கு என்று துவங்குகிறது. பைபாஸ்சர்ஜரி என்கிற வார்த்தை'சர்ஜரி பைபாஸ் ஆகிறது."ஆபரேஷன் என்கிற வார்த்தை 'ஆப்' ஆகிறது. அவரது தடுமாற்றத்தை கண்ட மங்கையர்க்கரசி, அவரது நடுங்கும் கையில், நடுக்கமெடுத்த டெலிபோனை லாகவமாய் பற்றினாள். கட்டிலில் உட்கார்ந்தபடியே மகனிடம், உரிமைக்குரல் கொடுத்தாள். “ஏண்டா. என் ககம் கிடக்கட்டும். நீ ஏண்டா இருமுற? டாக்டர்கிட்ட போக வேண்டியதுதானே. இங்க மாதிரி முடியாதா? முன்கூட்டியே சொல்லிட்டுதான் போகணுமா. என்ன அமெரிக்காவோ. சரி கஷாயம் வச்சாவது குடிக்கிறது.? இதுகூட ஒன் பொண்டாட்டிக்கு வச்கக் கொடுக்க தெரியாவிட்டா என்னடா அர்த்தம்." மகன்காரன், மீண்டும் இருமியபோது, தாய்க்காரி, கணவனை பார்த்து 'பாவம் பிள்ளைக்கு உடம்புக்கு சரியில்லயாம் என்று சொல்லிவிட்டு, மீண்டும் மகனிடம் உரையாடினாள்.