பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினை - விதை 99 ஏண்டா... அப்பாகிட்ட, ககமா இருக்கீங்களான்'னு கேட்டியா? அவர் ககமாய் இல்லாததுனாலதான் இப்படிப் பேசுறேன். அவருக்கு இருதயத்துல கோளாறு. பைபாஸ் சர்ஜரி செய்யனும், இரண்டு லட்ச ரூபாய் தேவையாம். என்னடா இது. எவ்வளவு டாலர் அனுப்பணுமுன்னு கேட்கிற...? நீ படிச்சவன்தானா? நீயே டாலர்ல கணக்குப் போட்டுக்கோ. ஆமாம், உடனே அனுப்பு. உன் பெண்டாட்டிய நான் விசாரிச்சதாச் சொல்லு என்னடா. அப்பா உடல்நிலையைப் பற்றி விவரமாச் சொல்லனுமா?” கட்டிலில் உட்கார்ந்திருந்த மங்கையர்க்கரசி. தலையை நிமிர்த்தி நிமிர்த்தி, பின்னர் கம்பீரமாய் எழுந்து மகனிடம் விலாவாரியாய் விளக்கிக் கொண்டிருக்கிறாள். அவளது ஒவ்வொரு அங்குல நிமிர்வும், அழகேசனின் மேனியை ஒவ்வொரு அடியாய் தாழ்த்திக் கொண்டிருக்கிறது. வாககி - 1995 ©