பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

饥O க. சமுத்திரம் "ஆமாங்க ஸார், கடைக்குப் போகணும். கெஸ்ட்ஸ் வாராங்க." "கார்லே ஏறிக்கோம்மா." "வேண்டாம் எபார்.” "தானாப் போற கார்ல நீயும் வாரதுல தப்பில்லம்ா. நீ என் மகள் மாதிரி. வாம்மா." அவர்களின் உரையாடலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது மாதிரி, விஸ்வநாதன் காருக்குள் இருந்த ஒரு கோப்பை எடுத்துப் புரட்டினான். செந்தாமரை, அந்த அதிகாரியை அதிகமாகக் காக்க வைக்கக் கூடாது என்று, கதவை வேக வேகமாய் இழுத்து மூடப்போனபோது, மீண்டும் வீட்டுக் கணக்கு நினைவுக்கு வந்தது. காருக்குள் அவரிடம் பேசமுடியாது. இப்போ எப்படி. சட்டென்று ஒர் எண்ணம். "ஏங்க, கதவைப் பூட்ட முடியல. கொஞ்சம் வாரீங்களா?” எழுந்து வந்த விஸ்வநாதன் கதவைப் பூட்டியபடியே கேட்டான். "கதவு ஈசியாத்தானே பூட்டுது?” "ஒங்களுக்கு எல்லாமே ஈசிதான். இதனாலதான் எனக்கு எல்லாம் கஷ்டமாகுது." "என்ன பூடகமா பேகறே. என்ன விஷயம்?" 'மத்தியானம் ஒங்கண்ணாவும் அண்ணியும், குழந்தை குட்டிகளோட வீட்டுக்கு வரப்போறது தெரியுமா? அவங்களுக்கு ஆக்கிப்போட அரிசி இல்லன்னு தெரியுமா?" கோபமாகச் சொன்னவளைப் பார்த்து, விஸ்வநாதன் சிரித்தான். அந்தச் சிரிப்பு அவளையும் தொற்றியது. விஸ்வநாதன் பிசிறில்லாமலே பதிலளித்தான்.