பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 க. சமுத்திரம் ஒரு வெட்ட வெளி. அதில், காரை நிறுத்தச் சொன்னார் அதிகாரி. பிறகு, ஆணையிட்டார். "அதோ, அந்த கடையில போய் இரண்டு வாழைப்பழம் வாங்கிட்டு வா. இந்தா அய்ம்பது பைசா.” பெருமாள், தலையை சொறிந்துகொண்டே நடந்தார். சடைப் பய. கடை முன்னாலயே, காரை நிறுத்த சொல்லி இருக்கலாம். ஆனாலும், பெருமாள் சிந்தனையை உதறி போட்டுவிட்டு, அந்த கடையில் இரண்டு வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார். அந்த பழங்களை கையில் வைத்தபடியே, மேலும் கீழுமாய் பார்த்த அதிகாரி. மீண்டும் ஆணையிட்டார். "இதுக்கு பேரு பழமய்யா. வெயிட்டே இல்ல. இந்த பழத்த திருப்பி கொடுத்துட்டு காச வாங்கிட்டு வா.” பெருமாள், மீண்டும், வாழைப் பழத்தை கைகளில் ஏந்தி கடைக்காரரிடம்போனார்.விவரத்தைசொன்னார்.கடையோ,நாயே, பேயே என்று சொல்லாத குறையாக பெருமாளை திட்டியது.பழத்தை வாங்கவும் மறுத்துவிட்டது.வேறுவழியில்லாமல் பெருமாளே, அந்த இரண்டுபழங்களைதின்றுவிட்டு, சட்டைபையில் இருந்த அய்ம்பது காசை ஆள்காட்டி விரலுக்கும், பெருவிரலுக்கும் மத்தியில் வைத்துக் கொண்டு அதிகாரியிடம் வந்து கொடுத்துவிட்டு, இருக்கையில் அவசரம் கருதி, குதித்து ஏறினார். வாங்கிக் கட்டிக் கொண்டார். "உனக்கு அறிவு இருக்கா. காருல எப்படி ஏறணுமுன்னு தெரியாதா... நான் ஒருத்தர் ஆபீசர் பின்னால இருக்கேன். நீ என்னடான்னா திமுரா குதிச்சு ஏறுறே. பழையபடி இறங்கி, வழக்கம் போல ஏறுய்யா.” பெருமாள் பழையபடியும் இறங்கி, வழக்கம்போல் அவரை பயபக்தியோடு பார்த்துவிட்டு, இருக்கையில் பூ விழுவது போல விழுந்தார்.