பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 க. சமுத்திரம் போல் நிற்பவரும், ஒரே ராங்க் அதிகாரிகள்.வந்து கொண்டிருப்பவர், கெஜடட் அதிகாரியாகப் பதிவி பெற்று, முப்பத்தைந்துவயதைத் தட்டியவர். நிற்பவர், கிளார்க்காகச் சேர்ந்து கெஜடட் ராங்கிற்கு வந்திருப்பவர். முன்னவர் நேரடி நியமனக்காரர். பின்னவர் 'புரமோட்டி'. இந்த இருதரப்பு புரமோட்டி-நேரடி நியமன அதிகரிகளுக்கும் இப்போது சீனியாரிட்டி சண்டை விவகாரம் கோர்ட்டுக்குப்போயிருக்கிறது.அதுவரைக்கும் யார்யாருக்கு சீனியர் என்பது செட்டியார் முடுக்கு மாதிரி. ஆகையால் நின்று கொண்டிருக்கும் ஐம்பது வயதுக்காரர் வருகிறவரை ஜூனியராக அனுமானித்து அவரை உள்ளே தள்ளிவிட்டு, ஒரச்சீட்டில் உட்கார காத்துநின்றார்.ஆனால்,வருகிறவோ தனது ஜீனியர்ஏன் இன்னும் நடுப்பக்கம் போய் உட்காராமல் இருக்கிறார் எனறு சிந்தித்துக் கொண்டே வந்தார். நடப்பவர் நெருங்கியதும், நிற்பவர் கேட்டார். "உன் ஒய்ப்புக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னீயே. இப்ப எப்படிப்பா இருக்குது?” (அப்படியாவது குசலத்துக்கு மயங்கி போய் உட்காருவான்னா என்று பார்ப்போம்)"சரி ஜீப்புல ஏறு, நீங்க ஏறினால்தானே நான் ஏற முடியும்?” "ஊளைக்காற்று வீகது பாரு... எனக்கு கொஞ்சம் ஆஸ்துமா. ஒத்துக்காது. நீ மொதல்ல ஏறு. நின்றவருக்கு ஆஸ்துமா என்ற ஒரே காரணத்திற்காக, தான் நடுப்பக்கம் உட்கார இசைந்ததாக புரமோட்டி மீது ஒரு பரிதாபப் பார்வையை வீசிக்கொண்டே, நேரடி நியமனம் முதலில் ஏறினார். டிரைவர் கந்தன், இருக்கையில் எகிறிக் குதிக்காமல், அவர்களைப் பயபக்தியோடு பார்த்துக் கொண்டே, பணிவோடு ஏறினான். அவனுக்கு அவசரம். பிள்ளைத்தாய்ச்சி பெண்டாட்டி, சீக்கிரம் திரும்ப வேண்டும். விபத்து கிபத்து நடக்காமல் இருப்பதற்கு, சாமியைக் கும்பிடுவது போல், அவன் கைகளை