பக்கம்:தரும தீபிகை 1.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கு ண ம் 93

இ-ள்

. எந்த உயிர்க்கும் எவ்வகையிலும் எவ்விதத்தும் இடர் புரியாமல் திய வழிகள் யாவும் விலகி இவ்வுலகில் வந்துள்ள நிலையினை உணர்ந்து இனிமேல் வாாாத வழியினை நாடி நாளும் நீ சிந்தனை செய்து வருக என்பதாம்.

வெவ்வழி என்றது கேடு விளக்கும் தீய நெறிகளே.

இவ்வழி வந்த வகை=இந்த உலகத்தில் வந்து பிறந்திருக் கும் கிலையை. இருப்பு வகை தெளியின் எய்து நிலை வெளியாம்.

வாாாவழி என்றது மீட்டும் வந்து பிறவாத நெறியை.

o

இந்த உடலுடன் இங்கே தோன்றியிருக்கும் கிலையை ஒர்க லாவது பிறப்பின் பெற்றியையும் அதன் மூல காரணங்களையும் ஆராய்ந்து உணர்தல். உணரின், துன்பக் கூறுகளும் வினை விளைவு களும் தெரியும் ; தெரியவே பிறவி ஒழிதற்கு ஏதுவான கவ ஞானங்களை விழைந்து பவங்லை கடக்க நேரும் என்க. ==

விலகி ஒர்ந்து நாடிச் செய்க என்றது சீவ தயை யுடைய ய்ைக் கரும வழி ஒழுகிக் கத்துவ கரிசனம் செய்து பிறவி திர்ேந்து பேரின்பம் பெறுக என்றவாறு.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றிண்டு வாரா நெறி. (குறள், 356)

தறுகட் டறுகட்பம் தன்னைத்தான் கோவல் உறுதிக் குறுதி உயிரோம்பி வாழ்தல் o அறிவிற் கறிவாவ தெண்ணின், மறுபிறப்பு மற்றிண்டு வாரா நெறி. (அறநெறிச்சாரம், 126)

வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி ஆரா அமுதாய் அமைந்தன்றே-சீரார் திருத்தென் பெருந்துறையான் என்சிங்தை மேய ** ஒருத்தன் பெருக்கும் ஒளி. (கிருவாசகம், திருவெண்பா, 7) இம்மூன்று பாசுரங்களும் ஈண்டு எண்ணத் தக்கன. வாரா வழிக்கு வழி காட்டி இவை வந்துள்ளமை காண்க.

- அருட் பண்பும் ஆன்ம சிந்தனையும் கூறிய படியிது.

= -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/100&oldid=1324670" இலிருந்து மீள்விக்கப்பட்டது