பக்கம்:தரும தீபிகை 1.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 த ரு ம தி பி கை

86. நெஞ்சு நலமாய் நெறிமுறையே நீ ஒழுகின்

-m

அஞ்சும் நலமாய் அமையுமே-தஞ்சமென | كمه

எல்லா நலமும் இசையும் எளிதிசைந்து வல்லான் எனச் செய்யும் வங்து. AP (சு)

இ-ள் மனம் புனிதமாய் நீதி நெறியில் ஒழுகின் ஐம்புலன்களும்

நலமாய் அமைந்து எல்லா நலங்களும் எளிது கை வந்து வல்ல வன் என உலகில் உயர்ந்து விளங்குவாய் என்றவாறு.

இது, உள்ளப் பண்பின் உயர்வு கூறுகின்றது.

மன நலம் எல்லா நலங்களுக்கும் மூலம் ஆதலால் அதன் கிலைமையும் தலைமையும் தெரிய வந்தது. புறக்கே நீ வல்லவன் ஆக விரும்பின் அகத்தே நல்லவன் ஆகுக.

அஞ்சும் என்றது. மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளை. தஞ்சம் என=உரிமையாக.

ஒருவன் நெஞ்சு ముతో ஆயின் இந்த ஐந்தும் நல்லனவாய் அமையும் ; அமையவே அகத்தும் புறத்தும் அவன் கல்லவ குவன் ; ஆகவே புண்ணிய சீலனை அவன்பால் எல்லா இன்ப நலன்களும் அரிய பல மேன்மைகளும் எளிது வந்து சேரும் ; சோவே உலகம் முழுவதும் உவந்த போற்ற உயர்ந்த திகழ்வன்.

இசை=ர்ேக் கி. வியந்து விழைந்து எங்கும் புகழ்ந்த பேசுதல் என்னும் ஏதுவால் புகழ் இசை என வந்தது. இசைக் கல்= இனிது பாாாட்டி மொழிதல்.

- நல்ல நெஞ்சு ஆவது யாண்டும் எவ்வழியும் யாதும் தீமை கருதாக தாய்மை யுடையது. சித்த சுத்தியுடையவன் எல்லாப் பாக்கியங்களையும் எளிதில் அடைந்து எவர்க்கும் கலேவய்ை விழுமிய நிலையில் விளங்கி நிற்பன் என்பது கருத்து.

87. இனிய குணநலங்கள் எல்லாம் இறைவன்

புனித உருவாய்ப் பொலியும்-மனிதன்தான் அவ்வுருவைப் பேணின் அமலன் என அவனே எவ்வுலகும் ஏத்தும் எதிர்ந்து. (எ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/101&oldid=1324671" இலிருந்து மீள்விக்கப்பட்டது