பக்கம்:தரும தீபிகை 1.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 த ரும பிேகை

இத்தகைய குணநலங்களைப் பெற்றுள்ள அளவே ஆமனிதன் மாட்சி அடைகின்ருன் குணம் குன்றிய பொழுது மணம் குன்றி இழிகின்ருன் ஆதலால் யாண்டும் அதனைப் போற்றி வா வேண்டும் என்க. பான்மை = தன்மை, தகுதி.

  • சத்தியம் தானம் சம்மதம் இன்சொல்.

சாற்றுதல் ஒருவழிப் படுதல் புத்தியே முதல கரணம்ஒர் நான்கும்

அடக்குதல் புலன்கள்போம் வழியில் உய்த்திடா தமைத்தல் பொறை திடம் ஞானம்

உயிர்க்கெலாம் தண்ணளி புரிதல்

இத்திறம் அனைத்தும் மானத தீர்த்தம் - --

என எடுத்து இயம்பினர் மேலோர். (காசிகாண்டம்) இவ்வுத்தம குணங்களால் உயிர் புனிதம் அடைகின்றது.

உலக மதிப்பும், உணர்வின் தெளிவும், உள்ளத்தில் இன்ப மும் குணத்தால் வளர்ந்து வருகின்றன ; எல்லா தலங்களுக்கும் மூலகாரணமான அந்த இனிமைப் பண்பைப் பேணி மனிதன் இருமை இன்பங்களையும் பெறுக என்பது கருத்து.

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு: குணம் மனிதனை மகிமைப் படுத்துகின்றது. H ஒளிமணிபோல் குணவான் உயர்ந்து விளங்குகின்ருன். உலகம் அவனே உவந்து கொண்டாடுகின்றது. சீரும் சிறப்பும் உடையய்ை அவன் சிறந்து திகழ்கின்ருன். உயிர்கட்கு இதம்புரிதலே உயர் குணம் ஆகும். நெஞ்சு கலம் ஆயின் அஞ்சும் நலமாம். * குணசீலன் தெய்வம் என மிளிர்கின்ருன். இறைவன் அருள் அவன்பால் பெருகி வருகின்றது. புண்ணியங்களெல்லாம் அவனிடம் பொங்கி விளைகின்றன. ஆன்ம சோதியாய் அவன் மேன்மை மிகுந்து கிற்கின்ருன்.

க-வது அதிகாரம் குண்ம் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/105&oldid=1324675" இலிருந்து மீள்விக்கப்பட்டது