பக்கம்:தரும தீபிகை 1.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 - த ரும தீ பி. கை

என்பதில் பள்ளி நிலை அறிக. முன்பு இங்கனம் கின்ற அது பின்பு பிள்ளைகள் படிக்கும் இடத்தைச் சுட்டியுள்ளது உள்ளப் பள்ளத்துள்ள கலையை இனிது பயிலும் நிலையம் ஆதலின் பள்ளி என நேர்ந்தது. பிள்ளைகளைப் பூங்கொடியோடு ஒப்புற வைத்தது இளமையும் இனிமையும் வளமையும் கருதி.

ஒவ்வொரு பிள்ளையிடமும் அறிவு உள்ளக்கே உறைந்துள் ளது. அது நூல்களால் ஒளி பெற்று வளர்ந்து வெளியே விரிந்து எழுகின்றது. அவ்வளர்ச்சிக்கு ஆசிரியர் ஆதரவாய் கின்று கிளர்ச்சி தந்தருள் கின்ருர்.

புறத்தே குருவின் துணை நன்கு அமைந்திருக்காலும் தன் அகத்தே மாணவன் கருத்து ஊன்றி உணரவில்லையால்ை கல்வி யறிவு விருத்தி யாகாது.

“The more the power of Concentration, the greater the Knowledge that is acquired. ”

  • மன ஒருமைக்குத் தக்க அளவே கலையறிவு பெருகி எழு கின்றது ' எனத் தமது அனுபவத்தை விவேகானந்தர் இவ்வாறு பலரறிய வெளியிட்டுள்ளார்.

ஊன்றிய கருத்தும், உய்த்துணர்வும், நல்ல நூல்களும், தேர்ந்த குருவும் அகத்தும் புறத்தும் முறையே கல்விக்குக் துணைகளாயுள்ளன; இங்க நல்ல இனங்களைப் பேணிக் கல்வியில் ஒல்லையில் உயர்ந்து கொள்க என்பது குறிப்பு.

94. பூவேற நார்தான் புதுமணம் பூண்டதுபோல்

பாவேறும் செல்வர்தாம் பாடுபெற்ருர்-பாவேருர் நின்ற இடமும் கிலேதெரியா தையகோ பொன்றி ஒழிந்தார் புறம். (*)

- இ-ள் பூவினைச் சார்ந்து கார் மணம் பெற்றதுபோல் பாவினைச் சார்ந்த செல்வரே பூமியில் பெருமை மிகப் பெற்ருர் , அங்கனம்

சாராதவர் இருந்த இடமும் கடங் தெரியாமல் அழிந்து மறைந்து ஒழிந்து போயினர் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/109&oldid=1324679" இலிருந்து மீள்விக்கப்பட்டது