பக்கம்:தரும தீபிகை 1.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தரும தீபிகை


பப் பேறுகளை ஆருயிர்களுக்கு நேரே அருளுதலால், இந்நூல் தரும தீபிகை எனப் பேர் பெற்றுச் சீருடன் வந்தது என்க.

இந் நாலுக்கு இட்டுள்ள பெயருக்குக் காரணம் காட்டியபடியிது. உண்மைப்பொருளை உணர ஒட்டாமல் மறைத்து உயிரைக் குருடுபடுத்தி யிருத்தலால் அஞ்ஞானம் இருள் என வந்தது. இருண்ட மயக்கத்தில் உயிரினங்கள் புரண்டு உழலுகின்றன. ஊனம் இலா ஞானம்= ஐய விபரீதங்களில்லாத மெய் யுணர்வு. இவ் வுணர்வொளி ஓங்கி எழின் பிறவித்துன்பம் முதலிய ஊனங்கள் யாவும் ஒருங்கே ஒழிந்து போம் என்க.

பிறத்தலும் இருத்தலும் இறத்தலும் ஆகியசெயல்கள் உலக இயல்புகளாய் ஓயாது உலாவி வருகின்றன. துன்பத் துடிப்புகளால் எவ்வழியும் சீவர்கள் தோய்ந்து மாய்ந்து சுழலுகின்றன. மாயச் சுழல்கள் மாயாது நிகழுகின்றன.

பிறந்து இருந்து மறைந்து போவது மாயா மருமங்களாய் மருவி நிற்றலால் அந் நிலைகள் அதிசய விசித்திரங்களாய்த் தோன்றுகின்றன.

பிறந்தவர் எவரும் இன்பம் பெறவே விரும்புகின்றனர். துன்பம் நேர்ந்து விடலாகாதே! என்று யாண்டும் யாவரும் அஞ்சி வருதலால் துன்பங்களோடு அவர் தொடர்ந்து தோய்ந்து வந்துள்ள நிலைமையை உணர்ந்து கொள்ளச் செய்கிறது.

தொலையாத துன்பங்கள் யாவும் தொலைந்து நிலையான பேரின்ப நிலையை அடைவதே உயர்ந்த மனிதப் பிறப்பின் சிறந்த பயனாய் அமைந்துள்ளது. பொறி புலன்களை அடக்கி நெறியே ஒழுகி உள்ளம் புனிதமாய பொழுதுதான் தெளிவான ஞானம் வெளியாகின்றது. அந்த ஞான ஒளியில் மனிதன் உண்மைகளை உணர்கிறான், உணரவே உடையவனை நாடி உரிமையோடு உய்தி பெறுகிறான். அவ்வாறு பெற்ற ஒரு பெரியவர் ஈசனை நோக்கி எதிரே பேசியுள்ள நிலையை அயலே வருகிற பாசுரத்தில் நாம் ஆசையோடு காண வருகிறோம்.

"சோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள்
ஏக நாயக! யோக நாயக!
யான்ஒன்று உணர்த்துவது உளதே யான்முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/11&oldid=1439488" இலிருந்து மீள்விக்கப்பட்டது