பக்கம்:தரும தீபிகை 1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 த ரும தி பிகை

வஞ்சநெஞ்சோடு ஒப்பவைத்தது, கெட்ட எண்ணங்கள் கிறைந்து பிறர்க்குக் கேடு விளைத்து வரும் பாடு நோக்கி. Fi

உள்ளே நஞ்சு தோய்ந்து இருப்பினும் வெளியே குளிர்ந்த நீர்போல் தெளிந்து தோன்றுகின்றது. அத்தோற்றத்தில் மயங்கி அங் ைோ அள்ளிக் குடிக் கவர் துள்ளித் துடித்து மடிவர் ; அது போல் வஞ்ச நெஞ்சாை மருவினவரும் பரிதாபமாய் மறுகி அழிவர் என்க. வெளிமினுக்கில் மயங்காகே ; நெஞ்சம் தீயாை நஞ்சு என்று நினேங் து நீங்குக என்பதாம்.

உள்ளம் கொடியாாை எள் அளவும் கூடாதே என்பது

குறிப்பு.

97. நெஞ்சம் கொடிய நெடுமூர்க்க ரோடுறைதல்

நஞ்சம் கொடிய கரகமே-தஞ்சமென எவ்வழியும் அன்னர் இருக்குமிடம் சேராதே வெவ்வழி நீங்கி விடல். (எ)

இ-ள். கொடிய மனமுடைய நெடிய மூர்க்காைச் சேர்தல் கடு நாகமேயாம் ; அவர் இருக்கும் இடத்தை எவ்வழியும் நெருங்கா மல் வெவ்வழி நீங்கி விடுக என்றவாறு.

இது மூர்க்கரோடு அனுகாதே என்கின்றது. நெஞ்சக் கொடுமை நெடுமூர்க்கத்திற்கு மூல காரணம் ஆதலால் அது முன்னுற வந்தது. மூர்க்கம் ஆவது, தீய காரியங் களேத் துணிந்து செய்தல். முடக்கினும் இது மிகவும் கொடியது. மூர்க்கர் உறவை நஞ்சம் எனவும், நாகம் எனவும் குறித்தது இம்மையிலும் மறுமையிலும் அகனல் விளையும் இன்னல் நிலை கருதி. தஞ்சம் = ஆதரவு. தஞ்சம் ஆகாது ; நஞ்சமாம்.

நெஞ்சு பாழ்பட்ட அவர் எப்பொழுதும் யார்க்கும் இடர் களையே செய்வர் ஆதலால் அவாது தொடர்பு துயர கிலேய மாகவே பெருகி கிற்கும் ; அங்சேரோடு நெருங்க லாகாதென்க.

எவ்வழியும் என்றது எந்த வகையினும் என்றவாறு. சாதி, சமயம், தொழில், உறவு முதலிய எவ்வித காா ணத்தை முன்னிட்டும் வெவ்வினையாளரோடு சோதே என்றபடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/113&oldid=1324683" இலிருந்து மீள்விக்கப்பட்டது