பக்கம்:தரும தீபிகை 1.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இ ன ந ல ம் 109

அவ் வன விலங்குகள் இயல்பாகக் கொடியன வாயினும் உள்ளே வஞ்சம் இல்லாதன ; கொஞ்சம் அறிவிருங் கால் அவற்றை நன்கு அடக்கி ஆளலாம்; அதுவுமன்றி, இடம் அறிந்து தனி ஒதுங்கி யிருப்பின் அவற்ருல் யாதொரு கேடும் வராது. அக் கனி வாழ்வு தவம் மிக உடையதாய் உயர் கிலை யடையும்.

மூர்க்கரோ, எவ்வகையானும் கிருக்கார்: வஞ்சமும் தீமை யும் நெஞ்சம் முழுவதும் மண்டி யாண்டும் நஞ்சனேய வெஞ் செயல்களை நாளும் புரிவர் ; கோளும் குண்டுணியும் விளைத்துக் குடிகேடு செய்வர் ; ஒதுங்கி யிருந்தாலும் பதுங்கி வந்து ஒட்டிக் கெடுப்பர் ஆகலால் அக் காட்டு மிருகங்களைவிட இக் கேட்டு மாக்கள் மிகவும் அஞ்சத் தக்கவர் ஆயினர்.

ஒருநாள் பழகினும் உயிர் இழிந்து பல நாள் எள்ளல் உறம் என்றது, தியவர் தொடர்பால் உள்ளங்கெடும் ; கெடவே, நல்ல வரும் விழி தெரியாமல் பழி வழிகளில் படுவர் ; படவே, அப் பாவத்தால் மேன்மை யெல்லாம் பாழாய்க் கீழ்மை யடைந்து போவர் என்க.

பன்றியொடு சேர்ந்த பசுங்கன்றும் ஈனமலம்

தின்றுவிடும் தியரொடு சேரினே-நன்றறிந்த நல்ல மகனும் வைபுரிந்து தீயய்ை ஒல்லை யிழியும் உணர். ' - ஈனச் சேர்க்கையின் இழிநிலை இதல்ை இனிது புலம்ை. கொடிய மூர்க்கர் மீளாக் துயர்க்கே ஆளாக்கி விடுவர் ஆகலால் அப்படுதியமை யாதும் அணுகாமல் அகன்று ஒதுங்குக என்பது கருத்து. -

100. இனமும் மனமும் இனியன வாகித்

தினமும் அறிவு நூல் சேரின்-கனமுடைய புண்ணியங்கள் எல்லாம் பொலிங்து விளையுமே எண்ணிய யாவும் எளிது. (ιδ)

இ-ள். இனமும் மனமும் இனியய்ை நாள்தோறும் நல்ல அறிவு அால்களோடு ஒருவன் பழகிவரின், அறநலங்கள் எல்லாம் அடைந்து கருதிய யாவும் எளிதே கைவரப் பெறுவன் என்றவாறு. கனம் = உறுதி, மேன்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/116&oldid=1324686" இலிருந்து மீள்விக்கப்பட்டது