பக்கம்:தரும தீபிகை 1.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 த ரு ம தி பி கை

அறிவு நூல் என்ற த உணர்வு நலம் சாந்து உயிர்க்கு உறுதி யருள் கின்ற உயர்க்க நூல்களே. அறிவு நலம் யாதும் இன்றி வறிதே கலித்துள்ள வீண நூல்களைக் காணலாகாது. கானின், உள்ள அறிவும் கெட்டு உறுதி நலம் குன்றும் ஆதலால் அப் பொல்லாக் காள்களைப் புறம் தள்ளி, அறம் படிந்த நல்ல நூல்களை நயந்துகொள்ளுக. ஈனங்கள் படித்தால் ஞானங்கள் படியா.

எல்லார்க்கும் யாண்டும் இதமே கருதுகின்ற புனித நெஞ் சமே இனிய மனமாம். உள்ளப் பண்புடையாாய்ப் பல்லுயிர்க்கும்

இாங்கியருள்கின்ற மேலோாே ஈண்டு இனிய இனம் என கின்ருர்.

சித்த சக்தி யுடையய்ை உத்தமர்களோடு சேர்ந்து சிறந்த தத்துவ நூல்களை ஒருவன் ஆராய்ந்து வரின், ஆன்ம ஒளி பெருகி மேன்மை மிகப் பெறுவன் ; புண்ணிய சீலனை அவன்பால் அரிய இன்ப நலங்களெல்லாம் எளிது வந்து அடையும் ஆதலால்

எண்ணிய யாவும் எளிது விளையும் ' என வந்தது.

மன நலம் உடையவனுய் மருவி வாழ்க ; மேலோரைச் சேருக ; கல்ல அறிவு நூல்களை நாளும் பழகு ; இவ்வாறு செய்துவரின், வெவ்வினைகள் நீங்கித் திவ்விய மகிமைகள் ஒங்கும் என்பது கருத்து. தினசரி கியமம் தெரிவித்த படி யிது.

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு.

நல்லார் இணக்கம் நலம்பல நல்கும். உள்ளப்பண் பாளரை உறவுசெய்து கொள்ளுக. குருவின் அருளால் அறிவுகலம் பெருகும். கல்வியாளரைச் சேர்ந்து செல்வர் சீர்பெறுகின் ருர். சேராகவர் பேர் அழிகின் ருர். வஞ்ச நெஞ்சரைச் சோ லாகாது. கொடியவர் கூட்டம் கடுநாக மாகும். ஈனர் அயல் வாழ் கல் ஈனமேயாம். காட்டு மிருகங்களினும் நாட்டு மூர்க்கர் தீயர். இனிய இனம் சேரின் இன்ப நலம் பெருகும்.

D-வது இன நலம் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/117&oldid=1324687" இலிருந்து மீள்விக்கப்பட்டது