பக்கம்:தரும தீபிகை 1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 த ரும தி பிகை

மனமே மனித உலகத்தை யாண்டும் இயக்கி வருகின்றது. மனிதன் அடைகின்ற எல்லா கிலைகளுக்கும் மூலகாரணமாய் அது கிலவியுள்ளது. அதன் அதிசய ஆற்றல்கள் அளவிடலரியன.

அரசனுக்கு அமைச்சன்போல் ஆன்மாவுக்கு மனம். அரசின் நலம் தீங்குகள் யாவும் அமைச்சனைப் பொறுத்திருக்கின்றன. அதுபோல் உயிரின் உயர்வு காழ்வுகள் எல்லாம் மனத்தை மருவி கிற்கின்றன. மனத்தின் கிலேமைக்குக் தக்கவாறே மனிதன் நிலவுகின்ருன். அது புனிதமாயின் உயிர் உயர் பாமாகும்.

உயிர்க்குக் கண்போல் ஒளி செய்துள்ள மனம் நல்லதாயின் இன்ப கலங்கள் எல்லாம் ஒருங்கே யுடையய்ை மனிதன் உயர்ந்து திகழ்வான் ஆதலால் மன நலத்தின் அளவே மாட்சி என வந்தது.

" மனகலம் மன்னுயிர்க்கு ஆக்க (5,り、ir 457.) 'மனகலத்தின் ஆகும் மறுமை (குறள், 459.)

என்னும் அமுக மொழிகள் ஈண்டு அறிய உரியன. என நலம் என்றது எப்படிப்பட்ட நன்மைகளும் என்ற வாறு. கல்வி செல்வம் அதிகாாம் குடிப்பிறப்பு முதலிய உயர் நலங்கள் எல்லாம் மனிதனுக்கு மதிப்பும் மாட்சியும் கருவனவே ஆயினும், மன நலம் இல்வழி அவை மாண்புரு என்க. அன. கலம் என்றது அந்த மன நலத்தை.

புறத்தே பொருள் வளம் முதலியன இல்லாது போயினும் அகத்தே மன நலம் மாத்தியம் உடையகுயின், அவன் புண்ணிய வானுய் இம்மையிலும் மறுமையிலும் இனம் மிகப் பெறுவான் ; வெளியே எல்லா வளங்களும் எய்தி யிருந்தாலும், உள்ளே மனம் நல்லதாக இல்லையானல் அவை யாவும் வீனும் அவனும் அல்லல் பல அடைந்து அவலய்ை இழிவன் என்க.

மன நலம் பெற்ருர் இருமையும் சீர்பெற்ருர் , பெருதவர்; அனைத்தும் அயல் அற்ருர் ' என்றமையால் உள்ள நலத்தின் உயர்வும் தகவும் உணாலாகும். உய்தி யாவும் அதன் செய்தியாம். புனித மனம் எல்லா இன்ப நலங்களையும் இனிது உதவி இருமையிலும் பெருமை மிகச் செய்யும் ; மனிதன் அதனை யாண்டும் இனிதாகப் போற்றி ஒழுக வேண்டும் என்பது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/119&oldid=1324689" இலிருந்து மீள்விக்கப்பட்டது