பக்கம்:தரும தீபிகை 1.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தரும தீபிகை

5


நனந்தலை யுலகத்து அனந்த யோனியில்
பிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழித்
தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்து
ஆயுறு துயரமும் யானுறு துயரமும்
இறக்கும் பொழுதின் அறப்பெருந் துன்பமும்
நீயலது அறிகுநர் யாரே? அதனால்
யான்இனிப் பிறத்தல் ஆற்றேன் அஃதான்று
உற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது
பிறிதொரு நெறியின் இல்லை; அந்நெறிக்கு
வேண்டலும் வெறுத்தலும் ஆண்டொன்றிற் படரா
உள்ளம்ஒன் றுடைமை வேண்டும்; அஃதன்றி
ஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று
தானலது ஒன்றைத் தான்என நினையும்
இதுஎனது உள்ளம் ஆதலின் இதுகொடு
நின்னை நினைப்பது எங்ஙனம்? முன்னம்
கற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர்
எற்பிறர் உளரோ? இறைவ! கற்பம்
கடத்தல்யான் பெறவும் வேண்டும், கடத்தற்கு
நினைத்தல்யான் பெறவும் வேண்டும், நஞ்சுபொதி
உறைஎயிற்று உரகம் பூண்ட
கறைகெழு மிடற்றுஎம் கண்ணுத லோயே!”

பரமனை நோக்கிப் பட்டினத்து அடிகள் இவ்வாறு உரிமையோடு உருகி உரையாடி யிருக்கிறார். பிறவித் துன்பங்களைக் குறித்துக் காட்டிப் பிறவா நிலையைப் பெற வேண்டும் என்று அவர் பரிவோடு பேணி மூண்டுள்ளது பெரிதும் கருத வுரியது.

நூலின் பயன்

அறங்கண்டேன் ஆன்ற பொருள்கண்டேன் இன்பத்
திறங்கண்டேன் வீடும் தெரிந்தேன்-நிறங்கொண்ட
செவ்வேளுட் கொண்ட செகவீரபாண்டியனர்
இவ்வே ளொருநூலால் இன்று. (5)

இ-ள்

ஒளிமயமாயுள்ள முருகனை உள்ளத்தில் கொண்டுள்ள கவீரபாண்டியனானர் அருளிய இந்நூலால் அறம் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/12&oldid=1439497" இலிருந்து மீள்விக்கப்பட்டது