பக்கம்:தரும தீபிகை 1.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 த ரு ம தி பி கை

103. புன்னெறியில் தன்னுளத்தைப் போக்காது போதமிகு

நன்னெறியில் செல்ல நடத்தின்ை-வன்னமிகு .

நெல்லுக் கிறைத்தான்போல் நீள்வான்மற் றல்லாதான்

புல்லுக் கிறைத்தான்போல் போம். (நட)

  • இ-ள்.

மனத்தை நல்வழிப் படுத்தினவன் நெல்லுக்கு நீர் பாய்ச்சின வன்போல் நலம்பல பெறுகின்ருன் ; அல்வழியில் செலுத்தின வன் புல்லுக்கு இறைத் தவன்போல் புலையாடிப் டோகின்ருன்

எனறவாறு

புன்னெறி=இழிவான ஈன வழிகள்.

நன்னெறி = கரும மார்க்கம். போதம்=அறிவு.

புன்மை கருவது புன்னெறி ; நன்மை அருள் வது நன்னெறி. உண்மை கிலை தெரிந்து உயர் நலம் பெறுக என்பதாம்.

மனம் இழிந்த வழிகளில் சென்ருல் மனிதன் ஈனய்ை இழிந்துபடுகின்ருன்; அது புண்ணிய கெறிகளில் போனுல் அவன் புண்ணிய சீலய்ை உயர்ந்து விளங்குகின்ருன்.

இந்த விளைவுகளை விளக்குதற்கு இாண்டு உவமைகள் வங் துள்ளன. பொருள் நிலைகளை நுணுகி உணர்ந்து கொள்க.

வயலிலே நெல்லுப் பயிருக்கு ைேர ச் செலுத்தினவன் நல்ல பலன்களைப் பெற்றுச் செல்வவான் ஆகின்ருன் : அயலே களே யான புல்லுக்குப் போக்கின வன் ஒரு பலனும் பெருமல் விணே அல்லல் அடைந்து இழிகின்ருன். ஆகலால், நல்வழியில் செல் வோன் நலம் பெறுதற்கும் அல்வழியில் புகுவோன் அவம் அடைதற்கும் உவமைகளாய் இவை இங்கே எடுத்துக் காட்ட நேர்ந்தன.

வன்னம்= அழகு, வளம். உயிர்க்கு உறுதியான உணவு நலம் அருளும் உயர் பயிர் ஆகலான் அதன் இயல்புணா வந்தது.

மனத்தை இங்கே ர்ே ஒடு ஒப்பவைத்தது அதன் கிலேமை

தெரிய. பள்ளம் கண்ட இடமெல்லாம் வெள்ளம் பாய்தல்போல்

புலன்களில் உள்ளம் பாய்தலை நாளும் உணர்ந்து கொள்ளலாம்.

பொறிகளில் வெறி மண்டி ஒடும் மனத்தை அறிவினல் அடக்கி நல்ல நெறியில் ஒழுக விடுக ; இல்லையேல் அது பொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/121&oldid=1324691" இலிருந்து மீள்விக்கப்பட்டது