பக்கம்:தரும தீபிகை 1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ம ன ந ல ம் 115

லாத வழிகளில் புகுந்து போம் ; போகவே ரீ பொல்லாதவனகி

அல்லல் பல அடைவாய் ; அவதி ஒர்ந்து உய்க. சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. (குறள், 422.) என்றது பொய்யா மொழி. பொருளை துணுகி உணர்க.

போன போக்கில் மனக்கைப் போக விடாதே என்ற கல்ை அதன் பொல்லாப் போக்கு கிலை புலம்ை.

“A man’s nature runs either to herbs or weeds; therefore let him seasonably water the one, and destroy the other மனித இயற்கை நல்லதிலும் தீயதிலும் விரைந்து பாய்கின்றது ; ஆகையால் கெட்டதைத் தடுத்து நல்லதில் செலுத்துக என ஆங்கிலப் புலவராகிய பேக்கன் என்பவர் கூறியுள்ளார்.

காடும் கரையும் மனக்குரங்கு கால்விட்டோட அதன்பிறகே ஒடும் தொழிலால் பயனுளதோ ஒன்ருய்ப் பலவாய் உயிர்க்குயி ராய் ஆடும் கருனேப் பரஞ்சோதி அருளேப் பெறுதற்கு அன்புகிலே தேடும் பருவம் இது கண்டீர் சேர வாரும் செகத்திரே (தாயுமானவர்) மனக்கைக் குரங்கு என்று குறித்து அதன் போக்கை விளக்கி மனிதன் இறைவன் அருளை அடையும்படி இது இனிது போகித்துள் ளது. போதனையின் சாதனையை உணர்ந்து கொள்க.

உள்ள க்கை நல்வழிப்படுக்கி ஒழுகுக என்பது கருத்து.

104. எண்ணம் இனியதேல் எஞ்ஞான்றும் இன்பநலம் நண்ண எவரும் நயங்தேத்த-விண்ணவன்டோல் சீரெல்லாம் பெற்றுச் சிறந்துயர்வான் தீயதேல் பாரெல்லாம் எள்ளப் படும். (+)

இ-ள். மனிதனது எண்ணம் இனியது ஆல்ை இன்ப நலங்களை அடைந்து யாரும் புகழ்ந்து போற்றச் சீர் பல பெற்றுக் தெய்வம் போல் சிறந்து விளங்குவான் , தீயது ஆயின் உலகமெல்லாம் இகழ்ந்து துளற்ற அவன் இழிந்து படுவான் என்ற வாறு.

இது எண்ணத்தின் இயல்பு கூறுகின்றது. இனிய எண்ணம் என்றது அருள் கனிந்த நல்ல கினைவுகளே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/122&oldid=1324692" இலிருந்து மீள்விக்கப்பட்டது