பக்கம்:தரும தீபிகை 1.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 த ரும தீ பி. கை

106. உள்ளம் புனிதம் உருனேல் உயர்கலங்கள்

--- _

"... |வெள்ளம் எனவுறினும் விளுமே-உள்ளொளியில் 劃

கண்ணுக்கு மையெழுதிக் காட்சியுற வைத்தாலும் ஒண்னுமோ மேன்மை உணர். (சு) இ-ள். உள்ளே ஒளி இல்லாத கண்ணுக்கு வெளியே அழகாக மை எழுதி வைத்தாலும் மாட்சி யுருது ; அதுபோல், அகத்தே துாய்மை இல்லாதவன் புறத்தே உயர்ந்த நலங்கள் பல நிறைக் திருந்தாலும் சிறந்து விளங்கான் என்றவாறு.

இது மன நலமே மனிதனுக்கு மகிமை என்கின்றது.

உயர் நலம் என்றது. செல்வம் பதவி முதலிய நிலைகளை. உடைமைகளின் பெருக்கங்களை உள்ளம் ஒர்ந்துகொள்ள வெள்ளம் வந்தது.

அரிய வளங்கள் பல பெருகி வெளியே மிகவும் பெரியவகை விளங்கினும், உள்ளே மனம் புனிதம் இலனயின் அம்மனிதன் உண்மையான மதிப்பை அடையான் என்பதை ஒர் உவமையால் இஃது உணர்த்தியுள்ளது.

கண் அழகை அதிகம் காட்ட இமை அருகில் அஞ்சனம் தீட்டுவது வழக்கம். ஒண்னுமோ=பொருந்துமோ.

ஒளியுடைய நல்ல கண்ணுக்கு மை எழுதின் அக்கருமைக் காட்சி அருமையாய் அழகு சுரந்து கோன்றும் ; ஒளியற்ற குருட்டு விழிக்கு அஞ்சனம் இடின், அது நகைக்கு இடமாய் இழிக்கப்படுமே யன்றி ஏ க்கப்படாது. எடுத்துக் காட்டு உவமை யான இது அடுத்துக் காட்டும் பொருளைத் தெளிவுபடுத்த வந்தது.

அகத்தே மனநல முடையார்க்குப் புறத்தே பிற தலங்கள் அமையின், அவை மேலும் பெருமை மிகச் செய்யும் ; உள்ளம் தீயது ஆயின், வெளியே எவ்வளவு செல்வங்கள் நிறைந்தாலும் அவர் நன்கு மதிக்கப்படார் என்க.

பொருள் வளங்களே அன்றிக் கல்வி முதலிய உயர் நலங் களும் மனம் தீயார்க்கு மாண்பு கா ஆகலால் வீண் ஆமே என இாங்க நேர்ந்தது. விணுகாமல் பேணுக என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/125&oldid=1324696" இலிருந்து மீள்விக்கப்பட்டது